சவுதி அரேபியா வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை புதிய நிர்வாகம்

சவுதி அரேபியாவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை & நலச் சங்கம் புதிய நிர்வாகம்

வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச் சங்கம் அறக்கட்டளை ஒருங்கிணைந்த சவுதி அரேபியா நிர்வாகம் விரைவில் கட்டமைக்க பட உள்ளது அதனால் சவுதி அனைத்து நிர்வாகமும் கலைக்கப் பட்டது புது வருட பிறப்பு ஜனவரி 2024 ஆண்டு அனைத்து மண்டலத்திற்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்க பட உள்ளனர். சவுதி அரேபியா முழுவதும் புதிய நிர்வாகத்தை கட்டமைக்கும் பொறுப்பு ரபீக் முகம்மது,ஜக்கரியா அன்வர், ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால் ஏற்கனவே செயல் பட்டு வந்த ரியாத் , ஜித்தா, தம்மாம், அபஹா, மக்கா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகமும் கலைக்க பட்டு விட்டது. புதிய நிர்வாகம் அமைக்க பட்ட பின்பு சவுதியில் பணிபுரியும் தமிழ் உறவுகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்ளப் படுகிறார்கள். இது குறித்து மாநில தலைமை வழி காட்டலில் மாநில இணை பொதுச் செயலாளர் இதயத்துல்லாஹ் அவர்களின் முயற்சியில் நேரில் சென்று இரண்டு கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது அதன் பின்பு ஜும் வழி கூட்டம் 30.12.2023 இன்று நடத்தப்பட்டது இக் கூட்டத்தில் ஜக்கரியா, சலீம், பாசில், அன்வர், மற்றும் மாநில அமைப்பு செயலாளர் சேக் சலீம் மாநில பொருளாளர் தமீம், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர் இந்த நிகழ்வு தமிழ் நாட்டில் உடல்நலம் குறைவால் மரணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறப்பை முன்னிட்டு அவருக்காக ஐந்து நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜித்தா மண்டலத்தில் முதலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது எனவும் அடுத்து ரியாத் தம்மாம் என அனைத்து மண்டலத்திலும் நிர்வாகம் கட்டமைப்பது. குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப் பட்டது

Tags

Next Story