பீகாரைச் சோ்ந்த மறைந்த அசோக் ஷா உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்த மறைந்த அசோக் ஷா உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அய்மான் சங்கம்

அபுதாபி மதினத் ஜாயீத் (பதா ஜாயீத்) பிணவறை அலுவலகத்திலிருந்து சங்கத்தின் மீட்பு குழு செயலாளர் கீழக்கரை செய்யது ஃபாசிலை தொடர்பு கொண்டு ஒருவரின் மரணித்த உடல் 2024 புத்தாண்டில் இருந்து யாரும் வந்து உரிமை கோராத நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலாவதியான எமிரேட்ஸ் ஐடி மட்டுமே ஆவணமாக இங்கு இருக்கிறது, அவர் இந்தியர் என்பதால் அபுதாபி அய்மான் சங்கத்தில் இருந்து அவருடைய குடும்பத்தார்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் மற்றும் பொதுச் செயலாளர் லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களின் அறிவுறுத்தலின்படி அய்மான் நிர்வாகிகள் விரைந்து இந்திய தூதரகம், அபுதாபி பீகார் சமாஜ் அமைப்பு, அல் அயின் கீழக்கரை Mubarak Mustafa மற்றும் துபாய் ஹோப் Kausar Baig உதவியுடன் கடவுச்சீட்டு பெறப்பட்டு விபரம் அறிந்து, இறந்தவர் கடந்த மூன்று வருடங்களாக சுயநினைவில்லாமல் கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் என்றும், அவர் பீகாரை சேர்ந்த அசோக் ஷா (48) என்றும் அறியப்பட்டு அவருடைய குடும்பத்தார்களை தொடர்பு கொண்டு அவர் மரணித்த செய்தியை அறிவித்தோம்.

அவர் மூன்று வருடங்களுக்கு முன்பாக வேலை பார்த்த அவரது கம்பெனியில் PRO ஹசன் என்பவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததோடு மரணித்த உடலை ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான பொருளாதார உதவிகளை செய்து தருமாறு கேட்டதின்படி அய்மான் நிர்வாகிகளும் கேரளா சகோதரர் ஷகீர் ஆகியோர் இணைந்து இந்திய தூதரகத்தின் பணிகளை செய்து முடித்து அஷோக் ஷா உடல் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று அபுதாபி பனியாஸ் மையவாடியில் இருந்து பெறப்பட்டு அபுதாபி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அசோக் ஷாவின் மகன் சுமன் மூலமாக மும்பை வழியாக பீகாருக்கு அனுப்பி வைத்தனா். சகோதரர் அசோக் ஷா (48) அவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு உதவிய நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகமது அப்துல் காதர், மீட்பு குழு செயலாளர் கீழக்கரை செய்யது ஃபாசில், செயற்குழு உறுப்பினர் கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராகிம்,செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முகம்மது கைசர், செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர் மற்றும் அபுதாபி இந்திய தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் அய்மான் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனா். இந்தியாவிலிருந்து மறைந்த அசோக் ஷா குடும்பத்தினர் அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

Tags

Next Story