பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவ மாணவியர்
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவ மாணவியர்
பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை பார்வையிடும் திட்டத்தின் அடிப்படையில் நியூ மில்லியனியம் பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தூதரகத்துக்கு வந்தனர். அவர்களை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் இந்திய தூதரகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு பிரிவின் பணிகள் குறித்து விளக்கி கூறினர்.
இதனையடுத்து இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப்- ஐ மாணவ, மாணவியர் சந்தித்தனர். அப்போது தூதரகத்தின் பணிகள் குறித்த தங்களது கேள்விகளை அவரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த சந்திப்பின் போது தூதரக அதிகாரிகள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story