துபாயில் மரணமடைந்த இலங்கை பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

துபாயில் மரணமடைந்த இலங்கை பெண் ரெஜினா (38) வின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

துபாய் மரணமடைந்த இலங்கை பெண் ரெஜினா (38) வின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

துபாய் நகருக்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை இலங்கையில் விட்டு விட்டு பிழைப்புக்காக ரெஜினா வேலைக்கு வந்தார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜனவரி 24 ஆம் தேதி துபாய் ராஷித் மருத்துவமனையில் மரணமடைந்தார். துபாய் நகரில் வேலை செய்து வந்த அவரது சகோதரி செல்வமேரி அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என தெரியாமல் ஷார்ஜாவில் வசித்து வரும் சுந்தரியை தொடர்பு கொண்டார்.

கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் சுந்தரி, சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்திடம் விபரத்தை தெரிவித்தார்.

இலங்கை துணை தூதரகம், கொழும்புவில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் முறையான உதவி கிடைக்கவில்லை.

துபாயில் செயல்பட்டு வரும் இலங்கை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பெரேரா உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 18.02.2024 அன்று இலங்கையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த பணியில் உதவிய மக்கள் தொடர்பு அலுவலர் சகீர் மதலன் உள்ளிட்ட அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story