மாலத்தீவில் தமிழக ஊழியா்கள் படும் வேதனை
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மாலத்தீவில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு தங்க இடம், உணவு, சம்பளமின்றி பாதிக்கப்படுவதாக கொடுத்த புகாரை அடுத்து அவா்கள் இந்திய தூதரகம் உதவியால் தாயகம் திரும்பினா்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், விக்னேஷ், கவியரசன்,மூர்த்தி ஆகிய நால்வரும் மாலத்தீவில் உள்ள உளிக்காம் என்னும் தீவில் கட்டுமான வேலைக்காக வந்துள்ளனர். அனைவருக்குமே இரண்டு மாதம், மூன்று மாதம் என சம்பள பாக்கி இருந்துள்ளது. மேலும் துங்குவற்கு இடவசதி இல்லை. முதலாளிடம் கேட்டபோது சரியான பதிலும் அளிக்கவில்லை. அதன் பிறகு தூதரகத்தில் புகார் அளிக்கவே அவர்களை மாலி சிட்டிக்கு முதலாளி அனுப்பி வைத்தார். பிறகு பாஸ்போர்ட் ஸ்டாம்பிங் செய்து கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொடுத்து நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர். இதே போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுரேந்தர் மாலத்தீவில் உள்ள மாலி சிட்டியில் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக பணியாற்றி வர்தார். அவருக்கும் 3 மாதம் சம்பளம் கொடுக்கப்படவில்லை. தவிர உடல்நிலை பாதிகப்பட்டும் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் இல்லை. இதன்காரணமாக இந்திய தூதரகம் அழைத்துச் சென்று புகார் அளிகப்பட்பதன் பலனாக கடந்த ஞாயிற்றுக் கிழமை தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணி மாலத்தீவில் உள்ள தக்கத்தி என்னும் தீவில் மேசன் வேலைக்காக வந்தார் இவருடன் இன்னும் 4 தமிழர்கள் வந்துள்ளனர். யாருக்குமே முறையாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தொடர்ந்து வேலை செய்தால் எந்த பலனுமில்லை என தெரிந்ததால் என்னை அழைத்து நடத்த விபரம் கூறினார்..அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து தாயகம் திரும்பினார். வெளிநாடுகளில் வேலை கிடைத்து விட்டது என முழுமையாக தெரியாமல், யாரையும் நம்பி இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று பாதிக்கப்பட வேண்டாம் என மாலத்தீவைச் சோ்ந்த ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.