துபாயில் நடந்த ஒட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் சிறப்பிடம் பெற்றார்

துபாயில் நடந்த ஒட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் சிறப்பிடம் பெற்றார்

 தமிழக வீரர் 

துபாயில் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் நகீல் பால்ம் ரன் என்ற தலைப்பில் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் 21.1 கிமீ, 10 கி.மீ, மற்றும் 5 கி.மீ தொலைவுகளுக்கான பிரிவில் ஓட்டப்பந்தயம் நடந்தது.

இதில் 5 கி.மீ தொலைவு ஓட்டப்பந்தயத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த சையத் அலி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

அவருக்கு விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார். அவருக்கு அல் அய்ன் இந்திய சங்கத்தின் மேனாள் தலைவர் முபாரக் முஸ்தபா, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் பூதமங்கலம் ஜியாவுதீன், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் வருகை புரிந்த ஈரோடு இலக்கிய ஆர்வலர் எம்.கே.ஜமால் முகம்மது, இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரக பொறுப்பாளர்கள் முஹிப்புல் உலமா ஏ.முஹம்மது மஃரூப், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story