லண்டனில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை

லண்டனில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை

லண்டனில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை : வி.ஜி.சந்தோசம் அனுப்பி வைத்தார்

லண்டனில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை : வி.ஜி.சந்தோசம் அனுப்பி வைத்தார்

லண்டனில் நிறுவுவதற்காக விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலையில் வி.ஜி.சந்தோசம் அனுப்பி வைத்தார். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது. அச்சிலையினை வழியனுப்பும் விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், லண்டன் உலகத் தமிழர் வரலாற்று மையம் சார்பில், தமிழறிஞர் சிவாப்பிள்ளையிடம் 50 அடி உயரமுள்ள திருவள்ளுவர் கற்சிலையை ஒப்படைத்தார்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், கடந்த 31 ஆண்டுகளாக உலகெங்கிலும் பல்வேறு இடங்களில், 159க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டாக்டர் வி.ஜி.சந்தோசம் கூறுகையில், தமிழ் மொழி வளர, ஒரு முன்மாதியாக விளங்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலைதனை உலகமெல்லாம் நிறுவுவதற்கும், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக, உலகளவில் 'யுனெஸ்கோ' அங்கீகரிக்கவும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் பாடுபட்டு வரும் என்றார். இவ்வழியனுப்பும் விழாவில், ஞானம் சிவாப்பிள்ளை மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜிபி ராஜாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சிலை கப்பல் மூலமாக லண்டன் மாநகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது வருகின்ற மே மாத கடைசி வாரத்தில் லண்டன் மாநகரத்தில் இருந்து வருகை தர உள்ள பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகளை லண்டன் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags

Next Story