அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்

அய்மான் சங்கத்தின் சார்பில் அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்

அபுதாபி கே.எஃப்.சி. பூங்காவில் அய்மான் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 52வது தேசிய தின விழா வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

அமீரக தேசிய கீதத்தை பள்ளிக்கூட மாணவ, மாணவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாடினர். இந்த விழாவுக்கு அய்மான் சங்க தலைவர் ஹெச்.எம். முகம்மது ஜமாலுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் அமீரகம் நமக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த தேசிய தின விழா கொண்டாட்டத்தை வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம். இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் உறுப்பினர்கள், பரிசுப் பொருட்களை வழங்கி வரும் நன்கொடையாளர்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.ஹெச். சயீத் முகம்மது பாசில் இறைவசனங்களை ஓதினார்.

பொதுச் செயலாளர் மவுலவி ஏ.முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் அப்துல்லா முன்னிலை வகித்தார். விழாவில் அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் முன்னாள் தலைவர் முபாரக் முஸ்தபா, சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஜமால் முகைதீன், அமீரக காயிதே மில்லத் பேரவயின் பொதுச் செயலாளர் பரக்கத் அலி, துபாய் மண்டல தலைவர் காமில், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை பைத்துல்மால் தலைவர் சாகுல் ஹமீது, மக்கி ஹுசைன் ஆலிம், மீரான் பைஜி, சாதிக், லெப்பை தம்பி, அஜ்மல், பாசில், ஹாஜா முபீன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு டிவி உள்ளிட்ட பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பெண்களுக்கு தனியாக வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இலவச மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆவை அன்சாரி நன்றி கூறினார். காயல் ஹுசைன் மக்கி ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. விழாவில் 300 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு செட்டிநாடு உணவகத்தின் கீழக்கரை முகைதீன் காக்கா, உமா புகழேந்தி, ஸ்ரீதேவி சிவானந்தம், உம்ரா பயனத்துக்கான பரிசை வழங்க நூருல் ஹக் உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story