மஸ்கட்டில் பள்ளிவாசலை பார்வையிட்ட மத்திய அமைச்சர்

மஸ்கட்டில் பள்ளிவாசலை பார்வையிட்ட மத்திய அமைச்சர்

 வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் 

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் மஸ்கட்டில் உள்ள பள்ளிவாசலை பார்வையிட்டார்.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டுக்கு அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் மிகவும் பிரமாண்டமான முறையில் பள்ளிவாசலை பார்வையிட்டார். அந்த பள்ளிவாசல் சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. அந்த பள்ளிவாசலை கட்ட இந்தியாவில் இருந்து மார்பிள் கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பிரமாண்ட பள்ளிவாசலை மத்திய அமைச்சர் வி. முரளீதரன் பார்வையிட்டு வியந்தார். அவருக்கு பள்ளிவாசல் அதிகாரிகள் அங்குள்ள பல்வேறு பகுதிகள் குறித்து விவரித்தனர்.

Tags

Next Story