தம்மாம் நகரில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வரவேற்பு

தம்மாம் நகரில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வரவேற்பு

தம்மாம் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய கடற்படை கப்பலான சஜக்கின் அதிகாரிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. இதன் காரணமாக நல்லெண்ண பயணமாக இந்திய கடற்படை கப்பல் சஜக் வந்தது. இந்த கப்பலில் வந்த அதிகாரிகளுக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய - சவுதி அரேபிய கடற்படை அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Read MoreRead Less
Next Story