அய்மான் சங்கத்தில் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு

அபுதாபி அய்மான் சங்கத்தில் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு அளித்தனர்

தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு அய்மான் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார். நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொகுத்து வழங்கினார். துவக்கமாக மௌலவி கலீல் ரஹ்மான் பிலாலி இறை வசனம் ஓதினார்.

அய்மான் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ சாகுல் ஹமீது அவர்கள் எடுத்துரைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது பைக் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் அய்மான் சங்கம் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில் சிறப்பு விமானங்களை இயக்க மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவு கூறத்தக்கது. தொடர்ந்து உங்களது பணிகள் தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள், காயல் நலம் மன்றத்தின் நிர்வாகிகள், தேவிபட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கட்டுமாவடி ஜமாஅத் நிர்வாகிகள், அபுதாபி மௌலிது கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் பதில் மூலம் தெளிவு படுத்தினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மௌலவி எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்ழரி நன்றி உரை வழங்க துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் லால்பேட்டை மௌலவி ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி, துணைத் தலைவர் கீழக்கரை ஷேக் பரீத், துணைத் தலைவர் மதுக்கூர் ஒய்.எம். அப்துல்லாஹ், துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி, ஊடகத் துறை செயலாளர் தேவிபட்டினம் ஹாஜா முபினுதின், செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முஹம்மது கைசர், செயற்குழு உறுப்பினர் கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாகிர், செயற்குழு உறுப்பினர் ஷேக் முகம்மது, விழா குழு செயலாளர் லெப்பை தம்பி உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story