கத்தார் வருகை புரிந்த சமூக ஆர்வலருக்கு வரவேற்பு !
கத்தார் வருகை
கத்தார் வருகை
கத்தார் நாட்டிற்க்கு குறுகிய நாட்கள் விஜயத்திற்காக வருகை புரிந்த பஹ்ரைன் நாட்டு தமிழ் சமூக ஆர்வலரும், லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் நிறுவனருமான சையத் ஹனீஃபிற்கு கத்தார் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தலைவர் குறும்பூர் தாஹிர் ஷேக் பரீத் மற்றும் தமிழ் ஆர்வலரான முஹம்மத் ரபீஃக்கும் உடனிருந்தார்.
கத்தார் நாட்டு பயணத்தின் போது தமிழ் பெற்றோர்கள்,கடல் கடந்தும் தம் குழந்தைகளை தமிழ் படிக்க வைக்க எடுத்துக்கொள்ளும் ஆர்வம் கண்டு வியந்ததாகவும், தொழிலாளர்கள் முகாம் செல்லவிருப்பதாகவும், மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story