உலக தாய்மொழி தின இணையதள வழி பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சி

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இணையதள வழி பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சி

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை இந்திய நேரம் காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை தொடர்ந்து 14 மணிநேரம் சிறப்பாக நடைபெற்றது. 40 நாடுகளைச் சேர்ந்த 82 க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள், துனைவேந்தர்கள், நீதிபதிகள், தமிழ்ச் சங்கத் த,லைவர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், , தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் வாழ்த்துச் செய்தியுடன், வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் நிகழ்ச்சியினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் ஜா.குமார, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக மேனாள் துனைவேந்தர் பேராசிரியர் N.பஞ்சநதம் ஆகியோர் விழாப் பேருரை ஆற்றினர். நிறைவு விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர் மேனாள், மாவட்ட அமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், நிகழ்ச்சியினை தலைமை தாங்கி அவா்கள் முன்னிலையில் அஸிஸ்ட்வேர்ல்ட் ரிக்கார்ட் நிறுவனர் முனைவர் இராஜேந்திரன் உலக சாதனைச் சான்றிதழை வழங்கினார்.

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தொடர்ந்து 5 வது முறையாக இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்துள்ளது சிறப்புக்குரியது. விழாவில் நாதஸ்வரம், இன்னிசை, கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வினை கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை தலைவர் போ.சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்

Tags

Next Story