காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட டிடிஎஃப் வாசன்

பிரபல யு டியூபரும் இரு சக்கர வாகன சாகச வீரருமான டிடிஎஃப் வாசன் செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளனார்.இதுகுறித்து பாலு செட்டி காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கேட்டு பலமுறை மனு அளித்தும் அனைத்தையும் நிராகரித்த நீதிமன்றம் தொடர் காவலில் வைத்திருந்தது.

இந்நிலையில் சென்னை நீதிமன்றம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி காஞ்சிபுரம் பாலு செட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு பிறப்பித்ததையடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த இரண்டு நாளாக நீதிமன்ற ஆணை காவல் நிலையத்திற்கு வராததால், நேற்று காவல் நிலையத்திலிருந்து அவருக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக தங்களது நண்பருடன் வந்திருந்தார்.

அவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் நோட்டு புத்தகம் மற்றும் நீதிமன்ற ஆணை உள்ளிட்டவைகள் எடுத்து வராததால் மீண்டும் அவைகளை எடுத்து வர காவல் ஆய்வாளர் நிவாசன் அறிவுறுத்தியதின் பேரில் 20 நிமிடங்களுக்கு பிறகு அனைத்தையும் எடுத்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருக்கு காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மற்றும் காவல்துறையின் நடைமுறைகளை எடுத்துரைத்தனர்.

அதன் பின்னர் கையெழுத்திட்ட பின் மீண்டும் காவல் நிலையத்தில் வெளியே வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது ஏற்கனவே பேட்டியளித்ததில் வச்சி செஞ்சிட்டிங்க இனிமேல் ஒன்றும் இல்லை நண்பர்களாக இருப்போம் என கூறி காரில் ஏறி நண்பருடன் சென்னை புறப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story