தினசரி சந்தையில் 1 காலிபிளவரின் ரூ. 50

தினசரி சந்தையில் 1 காலிபிளவரின் ரூ. 50 க்கு விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினசரி சந்தையில் 1 காலிபிளவரின் ரூ. 50 க்கு விற்பனையா? திடீரென விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவர் விளைச்சல் குறைவு காரணமாக விலை உயர்வடைந்துள்ள நிலையில் தினசரி சந்தையில் 1 காலிபிளவரின் விலை 50 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயி நிலத்தில் பயரிடப்பட்ட காலிபிளவர் அறுவடையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூளகிரி , பேரிகை , அத்திமுகம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காலிபிளவரை பயிரிடப்பட்டு அறுவடை செய்து வருவது வழக்கம்.. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலிபிளவர் 1 மூட்டையின் விலை 200 முதல் 300 வரை விற்பனையான நிலையில் விவசாயிகள் காலிபிளவரை பயிரிடுவதை தவிர்தது வந்தனர்,இந்த நிலையில் காலி பிளவர் வரத்து குறைவு காரணமாக 1 மூட்டை ரூ.800 ஆயிரம் முதல் 900 ஆயிரம் வரை திடீரென விலை அதிகரித்துள்ளது. மேலும் 1 காலிபிளவர் விலை தினசரி சந்தையில் ரூ. 50 முதல் , 60 ரூ. வரை விற்ப்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story