100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா


வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான போலீசார் இன்று வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டை அருகே சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து நிலக்கரியை ஏற்றி வந்த லாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 100 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு கஞ்சாவையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் உள்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ பத்து லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காட்பாடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story