காங்கிரசில் 2வது நாளாக விருப்ப மனு விநியோகம்
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி 01 தொகுதியும் தமிழகத்தில் 09 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுகள் ஒதுக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேற்று மாலையில் இருந்து சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.. விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விருப்ப மனுக்கு 10,000 ரூபாய் மட்டும் மகளிருக்கு 5,000 ரூபாய் கட்சி நன்கொடையாக TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரவு வைக்க வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை நாளை மாலை 6.00 மணிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமனு கொடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் வருகிற 21-ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது நேற்று நிலவரப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கு 85-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது விளங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 25-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.