ஆற்காடு அருகே தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்

ஆற்காடு அருகே தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்

கோப்பு படம்


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை திடீரென தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்னால் உள்ள ஓடையை தூர் வாரும் பணியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள ஒரு மரத்திலிருந்து திடீரென பறந்து வந்த தேனீக்கள் பணியாளர்களை சரமரியாக கொட்டியுள்ளது. ஊழியர்கள் ஒவ்வொருவராக அந்த பகுதியிலிருந்து ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர்.

பின்னர் காயமடைந்த ஊழியர்கள் 30 பேர், சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story