குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் பெறல்

குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் பெறல்

மனு வாங்கும் மாவட்ட ஆட்சியர்


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 310 மனுக்கள் பெறப்பட்டது.

அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட ஆளவந்தான்பட்டி கிராமத்தை சார்ந்த திரு.சேது ராஜேந்திரன் என்பவர் சவூதி அரேபியாவில் இறந்தமைக்காக, இறப்பு நிவாரணத்தொகை ரூ.1,20,000/-த்திற்கான காசோலையினை, அன்னாரது மனைவி சாந்தியிடம், வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story