கடலூரில் 360 டிகிரி கண்காணிப்பு கேமிரா வாகனம் தொடங்கி வைப்பு
பறக்கும் படை வாகனம்
கடலூரில் பொதுத்தேர்தலை முன்னிட்டு 360 டிகிரி கண்காணிப்பு கேமிரா வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், பாராளுமன்ற பொதுதேர்தல் 2024-ஐ முன்னிட்டு பறக்கும் படை (FST) பயன்படுத்தப்படும் வாகனங்களில் முதன்முறையாக 360 டிகிரி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.
Next Story