மின்சாரம் பாய்ந்து 4 பசுக்கள் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து 4 பசுக்கள் உயிரிழப்பு

உயிரிழந்த பசுமாடுகள்


செய்யூர் அருகே பாளையூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 49. பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல, பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பாளையூர் கிராம வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, வயல்வெளிப் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பிகளை பசுக்கள் மிதித்துள்ளன.

இதில், மின்சாரம் பாய்ந்து, ராமலிங்கத்திற்கு சொந்தமான இரண்டு பசுக்கள், ஏழுமலை என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுக்கள் என, நான்கு பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன.

இதே பகுதியில், கடந்த டிச., 24ம் தேதி அறுந்து கிடந்த மின் கம்பியால், 5 பசு மாடுகள் உயிரிழந்தன. அதுமட்டுமின்றி, கடந்த ஜூலை 29ம் தேதி, ஒரு பசு உயிரிழந்தது. தொடர்ந்து, இப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் உயிரிழப்பது, விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், மேலும் உயிர் சேதங்கள் ஏற்படாமல் இருக்க, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்கம்பிகளை கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story