கனிமொழி எம்பி தலைமையிலான குழுவினர் கருத்து கேட்பு

கனிமொழி எம்பி தலைமையிலான குழுவினர் கருத்து கேட்பு

கருத்து கேட்கும் கனிமொழி எம்பி 

தமிழ்நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் கனிமொழி எம்பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டனர்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது திமுக துணை பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில்,

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ, சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, எம்.எம்.அப்துல்லா எம்.பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம் பிடித்த இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தூத்துக்குடியில்,

இன்று தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள்,

தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை நேரடியாக கேட்டு மனுக்களாகப் பெற்று வருகிறார்கள் முதலில் விருதுநகர் மாவட்டம் அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டமும் மூன்றாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.

இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் கீதா ஜீவன் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ பி சி வி சண்முகம் சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ், ஜமாத்துல்மா சபை மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் அழிம், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் ரகுமான்,

பீர் முஹம்மது அப்பா தர்கா செயலாளர் நவரங் சகாப்தின், முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பில்லா ஜெகன், மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, நிர்மல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாநில திமுக பேச்சாளர்கள் சரத் பாலா, இருதயராஜ், மாவட்ட திமுக பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பெருமாள் கோயில் அறங்காவல குழு தலைவர் ஏசி செந்தில்குமார், திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன்,

வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கீதா முருகேசன், முத்துவேல், ரங்கசாமி, மேடின்டா டேனியல், ஜெயா ஜாக்குலின் செல்வகுமார், ரெக்சிலின், பவானி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், சண்முகபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, ராஜா சுரேஷ்குமார், மைதீன், வழக்கறிஞர் அசோக், சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் ரசல், பாலா கிருஷ்ணன், மேயர் நேர்முக உதவியாளர்கள் ஜாஸ்பர், பிரபாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story