நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி கருத்தரங்கம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி கருத்தரங்கம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி கருத்தரங்கம்


பெரம்பலூர் மாவட்டம் அரசுத்துறைகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தொடங்கி வைத்தார்.

அரசுத்துறைகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தது: , மாணவ சமுதாயத்தினரிடம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுமையான தீர்வுகளை கண்டறிந்து நான் முதல்வன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுலவர்களுக்குமான பயிற்சிக் கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது.

இங்கு வழங்கப்படும் கருத்துகளுக்கு, தொழில்நுட்ப தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளுக்கு கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் தீர்வுகாணும் இந்நிகழ்விற்கு நிரல் திருவிழா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொழில் துறைகளிலும் தொடரும் சிக்கல்கள் மற்றும் நிகழ் நேர பிரச்சனைகளை தீர்க்க தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கண்டுபிடித்திடும் நோக்கத்தில் அனைத்து தொழில்நுட்ப மாணவர்களின் இறுதி ஆண்டில் Project Work கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் தொழில் முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் இன்றைய பயிற்சி வழங்கப்படுகின்றது. அனைத்துத்துறை அலுவலர்களும் இந்நிகழ்வை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு மோசஸ் உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story