காங்கேயம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும், அரசு பேருந்துந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வது, சேர்ந்த சந்திரசேகரன் சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழாவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் அறிவித்ரா 30.பேத்தி ஷாக் ஷி (3 மாத குழந்தை) ஆகியோர் திருக்கடையூர் சென்றுவிட்டு திருப்பூர் திரும்பி வரும்போது வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே எதிரே வந்த பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூத்த மகன் சசிதரனை தவிர காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பாவ இடத்தில் பலியாகினர்.

மூத்த மகன் சசிதரன் பலத்த காயங்களுடன் காங்கேயத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த கோர விபத்தால் சுமார் 4 மணி நேரமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் திருப்பூரில் தொழில் செய்து வருவதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 5 பேர் பலியாகியது காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story