பட்டாசு கடைகளில் அதிரடி ஆய்வு

பட்டாசு கடைகளில் அதிரடி ஆய்வு

பட்டாசு கடைகளில் ஆய்வு

தீபாவளி வருவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடிபொருள்கள் வியாபாரம் செய்யும் கடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பட்டாசு விற்பனை செய்யக்கூடிய கடைகளில் முறையாக ஆவணங்கள் இட வசதிகள் பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வியாபாரம் செய்யும் கடைகள் முறையாக அரசு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உரிமம் பெறாமல் பட்டாசு வியாபாரம் செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story