மார்க்.,கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக - சிபிஎம் கட்சி இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சி.பி.எம்.க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன் பேட்டி ஏற்கனவே பல கட்சிகள் கூட்டணியில், இருப்பதாலும் வேறு சில கட்சிகள் வர இருப்பதாலும் , இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுசார்த்தை முடிந்தவுடன், எந்த தொகுதி என முடிவு செய்யப்படும் ஏற்கனவே வெற்றி பெற்ற இரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தல். கமல்ஹாசன் கூட்டணிக்கு வருவார் என சொல்லப்படுகிறது 40 தொகுதியும் எங்கள் தொகுதி என்று நினைத்து தான் பணியாற்றுவோம்
Next Story