ஆவடி அருகே விபத்து - தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டிகள்

ஆவடி அருகே விபத்து  - தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டிகள்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் 

ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்து ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி ரயில் நிலையம் அருகே லோக்கல் மின்சார ரயில் அண்ணனூர் பணிமனையில் இருந்து வந்து பீச் ரயில் நிலையத்துக்கு செல்வது வழக்கம்.இன்று வழக்கம்போல் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையம் வந்து கொண்டிருக்கும்போது ரயில் நிலையத்தில் ரயில் நிற்காமல் இந்து கல்லூரி நோக்கி சென்றது. ரயில் டிராக் மாற்றப்பட்டு இருந்ததால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைக்கும் பணியை ஈடுபட்டு வருகிறனர் இந்த தகவல் அறிந்து ரயில்வே கோட்ட மேலாளர் டி ஆர் எம் வினோத் அவர்கள் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்து வருகிறார் பணிமனையில் இருந்து வந்த ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இந்த விபத்தால் 3 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story