வடலூரில் பாமகவினர் முற்றுகை போராட்டம்

வடலூரில் பாமகவினர் முற்றுகை போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்
வடலூரில் இன்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க நாளை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணனை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் பாமகவினர் கடும் வாக்குவாதம் நடத்தினர்.

விழா முன்னேற்பாடு பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags

Next Story