போலீஸ் ஸ்டேசனில் வெடி- கூலி தொழிலாளி பலி - ஒருவர் பலத்த காயம்
சங்ககிரி காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பொழுது மர்ம பொருள் வெடித்து மேற்கூரை சிதறியதில் கூலி தொழிலாளி பலி ஒருவர் பலத்த காயம் சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சேலம் மாவட்டம் சங்ககிரி சரக காவல் நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா அவர்களின் ஆய்வு நடப்பதையொட்டி காவல் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளர்கள் இன்று மாலை சுமார் 4 மணிக்கு காவல் நிலையம் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை எரியவிட்டு கொண்டிருந்தனா். அப்போது, காவல் நிலையம் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, குப்பையில் இருந்த மர்ம பொருள் ஒன்று ( வானவெடி) வெடித்து சிதறியதில் சங்ககிரியைச் சேர்ந்த நியமத்துல்லா என்பவரின் தொடைப் பகுதியில் காவல் நிலையத்தின் மேற்கூரை தகரம் கிழித்ததில் பலத்த காயம் அடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும் காவல் நிலையத்தில் சாலை விபத்து வழக்கு சம்பந்தமாக வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவருக்கு வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி, சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தகவலறிந்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் இதனால் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் பெரும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த சங்ககிரி சேர்ந்த ராஜ்குமார் மற்றும் இப்ராகிம் ஆகியோரிடம் காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்து குறித்து தனது சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி ஜமாத் உறுப்பினர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் முறையான விசாரணை செய்து இறந்து போன கூலி தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.