பஸ் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம், 09/12/2023 ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. 59 பேர் சென்றதில் ஏழு பேருக்கு மட்டும் பலத்த காயம்.. பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணையில் சிகிச்சை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுப்புரம், கடலூர், திருக்கோவிலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் குடும்பத்துடன் 59 பேர் இன்று காலை சுற்றுலா பேருந்தில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது. ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் அருகே பேருந்து பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதை அறிந்த ஓட்டுநர் சாலையின் இடது மற்றும் வலது புறமாக இயக்கி வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளார்.
பேருந்து கணவாய் பகுதியில் மோதி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த காவல் துறை, தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். விபத்தில் அரசு மருத்துவர் உட்பட ஏழு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு 23 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் படுகாயம் ஏற்பட்ட ஏழு பேரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.