பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்கு பதிவு.
பைல் படம்
சென்னை பள்ளிகளுக்கு இ மெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அண்ணா நகர் உள்ளிட்ட 9 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு.
சென்னையில் பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் இது புரளி என தெரிய வந்தது. இந்த நிலையில் அண்ணா நகர், ஜெ.ஜெ நகர், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஓட்டேரி, எஸ்பிளனேடு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு என தனித்தனியாக 9 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை.
Next Story