டாஸ்மாக் கடை அருகே தொடரும் செல்போன் திருட்டு

அரூர் டாஸ்மாக் கடைப் பகுதியில் தொடர்ந்து, செல்போன் திருட்டு நடப்பதால் குடிமகன்கள் உட்பட பலரும் அச்சமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், 16/12/2023. அரூர் பகுதியில் தொடர் செல் போன் திருட்டு, அச்சத்தில் பொதுமக்களும் குடி மகன்களும். தர்மபுரி மாவட்டம் அரூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் குரங்குபள்ளம் வனப்பகுதி, அருகே செயல்படுகிறது. இங்கு சரக்கு அடிக்க வர்ற,‘குடி’மகன்களிடம் தினமும் ஒரு கும்பல்,மொபைல் போன்களை திருடும் திருட்டு கும்பல் சில நேரங்களில், குடிச்சிட்டு தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும்,செல்போன் மற்றும் பணத்தை அடித்து பிடிங்கி கொண்டு வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். திருடி செல்லும் மொபைல் போன்களை,புரோக்கர்கள் சிலரிடம் கொடுத்து “போன்களை பறி கொடுத்தவர்கள் போன் செய்யும்போது, புரோக்கர் கும்பல், 'இவ்வளவு பணம் தந்தா தான் போனை தருவோம் என மிரட்டுவதாக கூறப்படுகிறது, செல் போன் விலை சுமார் 15,000 ரூபாய்,என்றால் மூன்றில் ஒரு பங்கு தொகையையான, 5,000 ரூபாயை வாங்கிகொண்டு மொபைல் போன்களை விற்பனை செய்கிறார்கள்.

“ போலீஸ்க்கு இந்த திருட்டு கும்பலின் மொத்த, ‘நெட் ஒர்க்’ பத்தி தெரிஞ்சாலும், திருட்டு கும்பல் பிடிக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டாலும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி சென்று விடுகின்றனர். இரண்டு அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் முதல் மேற்பார்வையாளர்கள் வரை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதால் திருட்டு கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என பொதுமக்கள் குடிமகன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இரண்டு கடைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் மேற்பார்வையாளர்களை இடமாற்றம் செய்தால் இதற்கு தீர்வு கிடைக்குமா என குடிமகன்களின் கோரிக்கையாக உள்ளது. தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் பகுதி வாழ் மக்கள் தமிழக அரசுக்கும் தர்மபுரி மாவட்ட காவல் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story