முதல்வர் ஸ்டாலின் ராசிபுரம் வருகை; ட்ரோன்கள் பறக்க தடை!

முதல்வர் ஸ்டாலின் ராசிபுரம் வருகை; ட்ரோன்கள் பறக்க தடை!

 முதல்வர் ஸ்டாலின் இன்று ராசிபுரம் வருவதை முன்னிட்டு, மாலை, 6:00 மணி வரை, ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று ராசிபுரம் வருவதை முன்னிட்டு, மாலை, 6:00 மணி வரை, ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (14.5.2024) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த R. தினேஷ் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை T.V. இரவி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து நேற்று (13.5.2024) அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் K.N. நேரு, எ.வ.வேலு, க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், மூர்த்தி, சு. முத்துசாமி, டாக்டர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R N. இராஜேஷ்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று(13.5.2024 - மாலை) அவரது உடல் இராசிபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே இன்று (14.5.2024 ) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது தனிச்செயலாளர் தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூருக்கு வருகை தர உள்ளார். காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகை தரும் அவர், அங்கிருந்து கார் மூலம் வெண்ணந்தூர் வருகிறார். பின்னர் அங்கு, T.V. இரவியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளார். தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் அவர் தனி விமானம் மூலம் சென்னை செல்வார்.

Tags

Next Story