சிஎன்ஜி வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர் பேரணி

பெட்ரோலிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்-டை ஆக்சைடு உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக சிஎன்ஜி விளங்கி வருகிறது.

அந்த வகையில் நகர எரிவாயு வினியோகத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ஏஜி&பி பிரதம் நிறுவனம் வேலூரில் பசுமை வேலூர் சிஎன்ஜி பேரணியை நடத்தியது.

வேலூர் கோட்டை அருகே உள்ள காந்தி சிலையில் துவங்கிய இந்த பேரணிவேலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சென்று இறுதியில் வேலூர் கோட்டை எதிரே முடிவடைந்தது. இதில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத போக்குவரத்தை வலியுறுத்தும் வகையில் சி என் ஜி-ல் இயங்கும் இலகுரக வாகனங்கள், தனியார் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. பேரணியை வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேயர் சுஜாத்தா, ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் வேலூர் மற்றும் கோலார் பிராந்திய தலைவர் கே.ஆர். வெங்கடேசன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஆர்டிஓ வெங்கடேசன், ஆர்டிஓ கவிதா, வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story