தேசிய கொடியை ஏற்றி ஆட்சியர் லட்சுமிபதி மரியாதை.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோ லட்சுமிபதி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயனளிகளுக்கு சுமார் ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிறப்பாக பணிபுரிந்த 79 காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ லட்சுமிபதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் சமாதான புறா ,மூவர்ண பலுன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடன் இணைந்து பறக்க விட்டார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஊர்க்காவல் படையினர் தேசிய மாணவர் படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர் இதைத்தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் மழை வெள்ளத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழக முதல்வரின் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பயனாளிகளுக்கு ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது பின்னர் பள்ளி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது