மத்திய குழுவினர் அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய குழுவினர் அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்தியக்குழு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் 12.01.2024 தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று 2ம் கட்டமாக மீண்டும் ஆய்வு செய்கின்றனர். கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் பாலங்கள் சேதமடைந்தன. குறிப்பாக ஏரல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆற்றுப்பாலம் உடைந்து விழுந்தது. மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன.

இந்த பாதிப்புகளை மழை வெள்ளம் ஏற்பட்ட உடனடியாக வந்து இரண்டு நாட்கள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தை சார்ந்த ரங்கநாதன் ஆதம்,மின்சக்தி துறையை சார்ந்த ராஜேஷ் திவாரி, மத்திய ஜால் சக்தி அமைச்சகத்தை சார்ந்த ஆர்.தங்கமணி, புதுடெல்லியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கே.எம். பாலாஜி ,மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் கே.பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று தூத்துக்குடி மாவட்டம் வருகை தந்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து குழுவினர், மாவட்டத்தில் இரண்டு குழுவாக பிரிந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதியான தூத்துக்குடி அரசு மருத்துவமனை முத்தம்மாள் காலனி ஸ்டேட் பாங்க் காலனி நகர் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஒரு குழுவினரும் மற்றொரு குழுவினர் மறவன் மடம், ஏரல், சிறுவைகுண்டம் உள்ளிட்ட மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுவதுமாக இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags

Next Story