மானாமதுரை அருகே சுவர் இடிந்து விழுந்து சேதம்

மானாமதுரை அருகே தெற்கு சந்தனூர் ஊராட்சி, தேவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராசு மனைவி நாகவள்ளி (60). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக ஓட்டு கொட்டகையால் ஆன மண் வீடு உள்ளது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அருகில் உள்ள கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியே வசித்து வருகிறார். தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த தொடர் மழையின் காரணமாக 3 மணி அளவில் நாகவள்ளி வீட்டின் ஒருபுறம் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து நாகவள்ளியை மீட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் அவர் தங்குவதற்கு இடமின்றி ஊர் நாடக மேடையில் வசித்து வருகிறார். தற்போது தங்குவதற்கு இடவசதியும், இடிந்த வீட்டிற்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்
Read MoreRead Less
Next Story