வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அதி கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அதி கனமழை எச்சரிக்கை
X

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 24 ஆம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த மேலடுக்க சுழற்சி தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது வரும் 24 ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதிகளிலும், மாலத்தீவு கொமேரியன் பகுதி, தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்த மாதிரி கடற்கரையில் ஒரு சில பகுதிகளிலும் அடையும். தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் கனமழை கர்நாடக பகுதிகளிலும், வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், வரும் 25ஆம் தேதி கேரளாவிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . அதிக கன மழை இன்றும் நாளையும் கேரள பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story