தர்மபுரி எம்பி ரயில்வே அமைச்சரிடம் நேரில் கடிதம்
அமைச்சரிடம் கடிதம் வழங்கிய எம்பி
தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தர்மபுரி எம்பி ரயில்வே அமைச்சரிடம் நேரில் கடிதம் தர்மபுரி மாவட்டம், 24/12/2023. தர்மபுரி - மொரப்பூர் -சென்னை செல்லும் இரயில்வே திட்டத்திற்கு மூக்கனூர் மற்றும் A.ரெட்டிஹல்லி கிராமங்களில் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வண்ணம் கையகப்படுத்துக, வந்தே பாரத் ரெயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நிறுத்த . தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,ஒன்றிய ரயில்வே துறை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்தார்.
தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். டி என்.வி செந்தில்குமார் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து தர்மபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தர்மபுரி- மொரப்பூர் சென்னை செல்லும் இணைப்பு இரயில் ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி அந்த நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தர்மபுரி - மொரப்பூர் இடையே ரயில் பாதை அமையும் இடத்தில் மூக்கனூர் மற்றும் A.ரெட்டிஹல்லி ஆகிய இரு கிராமங்களில் 6000திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாய மக்களின் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகள் இந்த பாதை அமைக்கும் பகுதியில் உள்ளதால் இந்த நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது. எனவே இரயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அளவிற்கு வேறு பாதையில் இந்த ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் இந்த இரு கிராம மக்களின் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வகையில் இந்த ரயில்வே திட்டத்தின் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கையான கோவை சூப்பர் ஸ்டார் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் பொம்மிடி ரயில் நிலையத்திலும் சென்னை திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூர் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என்றும் அதுபோல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்தார்.