மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பதிவு வெளியிடக்கூடாது

மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பதிவு வெளியிடக்கூடாது

 இன்று மாலை 6 மணிக்கு பின்னர் சமூக வலைதள பக்கங்களில் தேர்தல் தொடர்பானபதிவுகள் வெளியிடக்கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் சமூக வலைதள பக்கங்களில் தேர்தல் தொடர்பானபதிவுகள் வெளியிடக்கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதிவும் பதிவிடக் கூடாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19.04.2024 அன்று பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி காலை 07 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இறுதி தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள பக்கத்தின் உரிமையாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

மேலும் இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைவதைத் தொடர்ந்து, அதன்பின்னர் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதிவும் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக் கூடாது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ. லட்சுமிபதி,இ.ஆ.ப., Election related records should not be published after 6 pmதெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story