திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி

திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி

திமுக சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டி


திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.....

பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க கம்மல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரெனோபாஸ்டின் வரவேற்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்வேந்தன், கிருஷ்ணன் கிருஷ்ணா, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் ஆனந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த திரளான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கலைஞர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இதில் கல்லூரி பேராசிரியர்கள்நடுவர்களாக செயல்பட்டு சிறந்த பேச்சு மட்டும் கட்டுரை போட்டி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் கேடயம் வழங்கப்பட்டது மேலும், போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன பரிசுகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது மாநில நிர்வாகிகள், துரைசாமி டாக்டர் வல்லவன் , மாவட்ட துனை செயலாளர்கள் பாஸ்கர் , சம்பத், ஒன்றிய செயலாளர்கள்பெரம்பலூர் ராஜ்குமார், வேப்பந்தட்டை கிழக்கு ஜெகதீசன், வேப்பந்தட்டை மேற்கு நல்லதம்பி வேப்பூர் வடக்கு மதியழகன், வேப்பூர் தெற்கு ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான ஹரி பாஸ்கர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராசா, மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, இளைஞர் பாசறை பேரவை அமைப்பாளர் சுந்தரராசு,

அயலக அணி அமைப்பாளர் அகமது, சுற்றுச்சூழணி அமைப்பாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் கரீம், மற்றும் நிர்வாகிகள் எளம்பலூர் அறிவழகன், அஜித் மற்றும் ஹாலித், மோகன பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராகவி ரவிக்குமார் நன்றி உரையாற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story