சேலத்தில் வாகன சோதனை லாரியில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல்

சேலத்தில் நள்ளிரவில் வாகன சோதனை லாரியில் கடத்திய 2,1/2 டன் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் சேலத்தில் நள்ளிரவில் வாகன சோதனை லாரியில் கடத்திய 2,1/2 டன் வெடிபொருட்கள் பறிமுதல் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது இரண்டு பேர் தலைமறைவு அரூர், டிச.1: சேலத்தில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையில், வைக்கோல் (நெல் புல்லில்) மறைத்து வைத்து கொண்டு சென்ற இரண்டரை டன் வெடி பொருட்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

வெடிபொருட்கள் யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று, நேற்று அதிகாலை 1:30 மணியளவில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது. லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதாக, கருப்பூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்ற போது, வாகனத்தை வழிமறித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது வைக்கோல் கட்டுக்குள் ஏராளமான பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான தகவலை வாகன ஓட்டுநர் இளையராஜா தெரிவித்தார். வி

சாரணையில் லாரியில் இருப்பது வெடிபொருட்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த லாரியை மாநகர துப்பாக்கி சூடு மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். லாரியில் 100 பெட்டிகள் இருந்தது ஒவ்வொரு பெட்டிகளிலும் தல 25 கிலோ வெடி பொருட்களுடன் என மொத்தம் 2 ,1/2 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பென்னாகரம் பகுதியிலிருந்து கோவைக்கு கொண்டு செல்வதாகவும், லாரியில் இருப்பது வெடி பொருட்கள்தான் என தெரியாது என்றும், கோவைக்கு கொண்டுசென்று,. அங்கிருந்து வருவோரிடம் கொடுக்கவேண்டும்.

இதற்காக ரூ.1000 தருவார்கள் என்றும் லாரி ஓட்டுநர் இளையராஜா கூறியுள்ளார். விசாரணையில், பென்னாகரத்தில் அரசு.அனுமதி பெற்ற வெடிபொருள் குடோனில் இருந்து தான்,வெடிபொருட்கள் ஏற்றப்பட்டிருப்பதை தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். வெடிபொருள் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட வெடி பொருட்களின் தன்மை குறித்து, வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக லாரி ஓட்டுநர் இளையராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றம் மூலமாக வெடிபொருட்கள் குடோனில் வைக்க ஏற்பாடு செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் பிருந்தா, மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் 2.50டன் வெடிபொருட்கள் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (வயது 35) என்பவரின் வீட்டில் சேலம் தர்மபுரி மாவட்ட காவல் துறையினர் விசாரணைக்காக வந்த பொழுது பச்சமுத்து மகன் கார்த்திக் (வயது 33) என்பவர் தலைமறைவான நிலையில் பச்சமுத்து என்பவரை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெடி பொருட்கள் பறிமுதல் வழக்கில் தொடர்புடையதாக அரூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் குமார் (வயது 44) தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story