பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு
தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு
பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ராமநாதபுரம் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் பேட்டி ராமநாதபுரம் விவசாயிகளுக்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்கப்பெறாத திருவாடாணை மற்றும் ஆர்எஸ் மங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற்று தராதத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்து பின்னர் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கில் செயல்படுவதால் வரவேற்கும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்
Next Story