100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன்!
பலூன்
திருப்பூர் முக்கிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் தலைமையில் 100% வாக்களிப்பவன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார்ஜிகிரியப்பனவர்தலைமையில் திருப்பூர் மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலூனை வானில் பறக்க விட்டனர்.உடன் உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன், உதவி ஆணையாளர் வினோத்,கனகராஜ் தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட உள்ளனர்.
Next Story