அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

பேருந்து கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
பூந்தமல்லியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து தடம் எண்:76, நேற்று காலை புறப்பட்டது. பேருந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன், 58, ஓட்டிச் சென்றார். பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடக்கும் இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில் இந்த அரசு பேருந்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம் பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட பயணியர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story