ஆவியூர் கல்குவாரியில் அதிக அளவு விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

ஆவியூர் கல்குவாரியில் அதிக அளவு விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

தங்க முனியசாமி பேட்டி 

ஆவியூரில் வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரியில் அளவுக்கு அதிகமாக விதிமீறல் இருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கடம்பன்குளம் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் வெடிமருந்து அறையில் வாகனத்தில் இருந்து வெடி மருந்துகளை இறக்கிய போது வெடி வெடித்ததில் மூன்று தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குவாரி விதியை மீறி செயல்பட்டு வருவதாகவும் குவரியை நிரந்தரமாக மூட கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து குவாரியில் உள்ள விதிமீறல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உதரவிட்டார்.

இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி தலைமையிலான வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் கொண்ட குழு குவாரியில் விதிமுறை மீறல் குறித்து நடத்திய ஆய்வில், அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டது தெரிய வந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விதிமீறல் இருப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். விதிமுறை மீறல் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதன் பின்னாக மாவட்ட ஆட்சியரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்காக நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆய்வில், வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் விபத்திற்கு முன்னதாக பாறைகளை வெட்டி எடுப்பதற்காக 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளை துளையிட்டு வெடி மருந்துகள் செலுத்தி எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, மேலும் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அதை வெடிக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story