கணவர் உடல் அடக்கம் - King 24x7 செய்தி எதிரொலியால் மனைவி மீது வழக்குப்பதிவு

கணவர் உடல் அடக்கம் - King 24x7 செய்தி எதிரொலியால் மனைவி மீது வழக்குப்பதிவு

காவல் மற்றும் வருவாய் துறைக்கு தெரியாமல் கணவர் உடல் அடக்கம் - King 24x7 செய்தி எதிரொலியால் மனைவியின் மீது வழக்குப்பதிவு

காவல் மற்றும் வருவாய் துறைக்கு தெரியாமல் கணவர் உடல் அடக்கம் - King 24x7 செய்தி எதிரொலியால் மனைவி மீது வழக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலி தொழிலாளி. இவர், கடந்த 1 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள டேம் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட குடும்பத்தினர், போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்து விட்டனர். இது குறித்து King 24x7 செய்தி சேனலில் நேற்று 4 ந் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தோம். இச்செய்தியின் தகவலறிந்த வி.ஏ.ஓ சிவகுமார், அரூர் போலீஸ் ஸ்டேஷனில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த ராஜாவின் உடலை, காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தார். இதன்பேரில், ராஜாவின் மனைவி கனகா (34) மற்றும் உறவினர்கள் சிலர் மீது, அரூர் காவல்துறையினர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். King 24x7 செய்தி எதிரொலி காரணமாக காவல் மற்றும் வருவாய் துறைக்கு தெரியாமல் கணவர் உடல் அடக்கம், மனைவியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story