திருச்சியில் வருமான வரித்துறை சோதனை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், கோவை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் அண்ணாநகரில்,

கண்ணதாசன் சாலையில் உள்ள திமுக அமைச்சர் எ.வ வேலுவின் நண்பர் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் இன்று காலை இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விசாரணைக்காக குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மணப்பாறை சாமிநாதன் என்பவர் பிரபல பைனான்சியராக ஆவார். மேலும் லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story