கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி: ஆண்டிப்பட்டி கோட்டையில் சோதனை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்பு வழிபாட்டு தளம் அருகே நடந்தேறி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழக எல்லை மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு குற்றத் தொடர்பான குற்றவாளிகள் கரூர் மாவட்டத்திற்கு ஊடுருவ முயற்சிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட எல்லையில் உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி அருகே, அரவக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியை கடந்து செல்லும் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story