நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி

வெற்றி பெற்ற வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மருத்துவர் ச.உமா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 462036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை 29742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மருத்துவர் ச.உமா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் உள்ளிட்ட திமுக மற்றும் கொமதேகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story